செய்திகள்

பெரும்பான்மை பலத்துடனான ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை அமைப்போம் : பிரதமர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்;சி பெரும்;பான்மை பலத்துடன் ஆட்சிமைக்க வேண்டுமெனவும் அப்போதே மக்கள் மானியங்களை தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் நாட்டின் சக்தியையும் ஐக்கிய தேசியக்கட்சியின் சக்தியையும் இன்று காட்டியுள்ளோம். 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மேதினக் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டமாக இதனைப் பார்க்க வேண்டி யுள்ளது. அந்தளவு மக்கள் இன்று வருகை தந்துள்ளமை எமது சக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அன்று எனக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து வந்தார்கள். 2015ஆம் ஆண்டில் நாம் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால்இ சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அதனை மாற்றியமைத்து காட்டினோம். இந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு பல கட்சிகள் எமக்கு உறுதுணை புரிந்தன. ஆனால்இ இதில் பெரும்பகுதியை ஐக்கிய தேசியக்கட்சியே ஏற்றுக் கொண்டது.
ஆகவே சிறுபான்மை அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றிய வாக்குறுதிகள் எதிர்கால சந்ததியினரை இலக்காக கொண்டு செயற்பட வேண்டுமானால் அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மை அரசாங்கமாக இருக்க வேண்டும். ஆகவேஇ அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட அரசாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை உங்கள் முன்வைக்கிறேன் . என தெரிவித்துள்ளார்.