செய்திகள்

பெறுமதியான மாணிக்க கற்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்ட விரொதமான முறையில் பெறுமதியான நீலம் , ரோஸ் மற்றும் மஞ்சள் நிற மாணிக்க கற்களை இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணிக்க கற்களை சூட்சுமமான முறையில் சிகரட் பெட்டியொன்றுனுள் இட்டு சிகரட் போன்று தனது பையில் கொண்டு சென்ற போது விமான நிலையத்திலிருந்த சுங்க அதிகாரிகள் அவரை  கைது செய்துள்ளனர்.
இவ்வாறு இந்திய பிரயையொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடமிருந்து 90 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாணிக்க கற்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.