செய்திகள்

முறையிட்டபோது நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கலாம்: வடமாகாண முதலமைச்சர்

பெற்றோர் முறையிட்டபோது நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கலாம்: வடமாகாண முதலமைச்சர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவைக் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போது அவர்கள் விரைவான நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கலாம்.ஆனால் பொலிஸார் அவ்வாறு செயற்படவில்லை.

இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

நேற்று வடக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை மற்றும் அதற்குப் பின்னரான சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபருடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும்,இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.  யாழ்.நகர் நிருபர்-