செய்திகள்

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்கிறார் சம்பிக்க ரணவக்க!

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடு முழுவதும் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 1186 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்விதப் பிரச்சினையுமின்றி பெற்றோல் விநியோகிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளையடுத்து அது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.