செய்திகள்

பெல்ஜியத்தில் அணு மின் நிலையத்தை தாக்க திட்டமிட்ட தீவிரவாதிகள்

பெல்ஜியம் நாட்டு தலைநகரான பிரசல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தின்மீது தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 31 பேரை பலிவாங்கிய இந்த தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆறு பேரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணு மின் நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பெல்ஜியம் அணுசக்தி திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் வீட்டுக்கு அருகில் புதர்களில் அவர்கள் கேமராக்களை மறைத்து வைத்து சுமார் 10 நேரம் உளவு பார்த்து, பதிவு செய்திருக்கலாம் எனவும், இயக்குனரை கடத்தி அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் உள்ளூர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

பாரிஸ் தாக்குதலையடுத்து பெல்ஜியத்தில் உள்ள குடியிருப்பில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.