செய்திகள்

பெல்ஜியத்தில் பதட்டம், இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பெல்ஜியத்தில் இரு இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள அதேவேளை பெல்ஜியம் முழுவதும் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை அதிநவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொள்ள முயன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் என கருதப்படும் இரு நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடாந்தே இந்த பதட்ட நிலை உருவாகியுள்ளது.
பெல்ஜியத்தின் கிழக்குபகுதி நகரான வெரிவியர்சில் இரு நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ஜேர்மனியுடான எல்லையில் இந்த நகரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்கள் பல நிமிடங்கள் விசேட பொலிஸ் பிரிவின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர் ,பின்னர் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபர்கள் சிரியாவில் பயிற்சிபெற்று திரும்பியவர்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டு;ள்ளனர், இன்னொரு நபர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடமிருந்து நான்கு துப்பாக்கிகளும், குண்டுதயாரிக்கும் சாதனங்களும்,கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் போராடுவதற்காக 300 பேர் வரை பெல்ஜியத்திலிருந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
;

;