செய்திகள்

பெல்ஜிய தாக்குதல் தற்கொலையாளிகள் இருவர் சகோதரர்கள்

பெல்ஜியத்தின் பிரசல்ஸில் நேற்று காலை தற்கொலை தாக்குதல் நடத்திய இருவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் பெல்ஜியம் பிரஜைகள் எனவும் அதிகாரிகள் இறுதிப்படுத்தி உள்ளனர்.

இவர்களில் ப்ராஹிம் என்பவர் விமானநிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதன்போது 11 பேர் கொல்லப்பட்டனர். காலித் என்று அழைக்கப்படும் மற்றைய சகோதரர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தி இருந்தார். இதன்போது 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதேவேளை , விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய மற்றைய இருவரும் அடையாளம் காணப்படவில்லை. இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் தப்பி ஓடியுள்ளார்.

கீழே உள்ள படத்தில் கறுப்பு நிற உடையில் நடுவில் இருப்பவரே ப்ராஹிம் என்றும் வலது பக்கத்தில் வெள்ளை நிற உடையில் இருப்பவரே தப்பி யடியவர் என்றும் இடது பக்கத்தில் நிற்கும் மற்றையவர் தாக்குதலில் பலியாகிவிட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

103488604-AIRPORT_SUSPECTS_CLEAN.530x298

இவர்கள் மூவரையும் முகவரி ஒன்றில் இருந்து தானே கொண்டுவந்து விட்டதாக டாக்ஸி டிரைவர் ஒருவர் கூறியுள்ளார். இந்த முகவரியில் உள்ள வீட்டை பொலிசார் சோதனை செய்தபோது அங்கு வெடிமருந்து தயாரிக்க பயன்படும் பொருட்களும் 15 கிலோ கிராம் எடையுள்ள வெடி குண்டு ஒன்றையும் கண்டு பிடித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்த ப்ராஹிம் என்பவரது என்று நம்பப்படும் குறிப்பு ஒன்றையும் அருகில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

” நான் அவசரத்தில் இருக்கிறேன். மேலும் என்ன செய்வது என்று எனக்கு எதுவும் தெரிவவில்லை. எல்லா இடங்களிலும் அவர்கள் என்னை தேடுகிறார்கள். நான் இனிமேலும் பாதுகாப்பாக இல்லை. நான் அவர்களிடம் அகப்பட்டால் என்னை சிறையில் போடுவார்கள்.” என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த இரு சகோதரர்களும் பொலிசாருக்கு முதலிலேயே தெரிந்தவர்கள் என்றும் ஏற்கனவே பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் தெரியவருகிறது.

தப்பி ஓடியுள்ள இந்த நபர் பிடித்திருந்த ” பொதி வண்டியில் ” பாரிய ஒரு குண்டு இருந்தது. இது உடனடியாக வெடிக்கவில்லை. சற்று நேரத்தின் பின்னர் தான் வெடித்து. ஆனால், இதன்போது எவரும் உயிரிழக்கவில்லை.

_88906172_032126535-1