செய்திகள்

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்காக பாம் எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானம்

இலங்கையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பாம் எண்ணெய் விவகாரம் தொடர்பாக உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)