செய்திகள்

பேசாலை பகுதியில் 44 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

மன்னார் பேசாலை முருகன் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் நேற்று (28) மாலை மாலை மீட்டுள்ளனர்.

இதன் பெறுமதி 44 லட்சங்களாகும்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் இ அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு  44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்டுள்ளனர் எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த கஞ்சா பொதியியை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கையேடுத்துவருகின்றனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.