செய்திகள்

பேச்சுவார்த்தையில் புலிகளை ஓரம்கட்ட பிரிட்டன் அரசியல் அழுத்தம் கொடுத்தது: பில் மில்லர் அம்பலப்படுத்துகிறார்

இலங்கையில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியாவின் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானிய ஆய்வாளரும் ‘ தமிழ் மக்களுக்கு எதிரான பிரிட்டனின் அழுக்கான யுத்தம்’ என்ற நூலின் ஆசிரியருமான பில் மில்லர், பேச்சு வார்த்தை மேசைகளில் புலிகளை ஓரம் கட்டவும் இலங்கை அரசாங்கத்துக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கவும் பிரித்தானியா அரசியல் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

பில் மில்லர் ஆங்கிலத்தில் முன்னர் வெளியிட்டிருந்த ‘தமிழ் மக்களுக்கு எதிரான பிரிட்டனின் அழுக்கான யுத்தம்’ என்ற நூலின் தமிழாக்கம் நேற்று மாலை யேர்மணியின் பிறிமன் நகரத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டபோது உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், எவ்வாறெல்லாம் பிரித்தானிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கங்களின் யுத்தங்களுக்கு தொடர்ச்சியாக உதவி புரிந்து வந்தது என்று தனது நூலில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களை சுருக்கமாக குறிப்பிட்டார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

3 வருடங்களுக்கு முன்பு தமிழ் அகதிகளை இங்கிலாந்து ஒட்டுமொத்தமாக சிறிலங்காவுக்கு நாடு கடத்தியதை கண்ட பின்பு இந்த அறிக்கைக்கான ஆய்வை தொடங்கினேன். அவர்களுள் அனேகமானோர் முன்னரே ஒரு தடவை சித்திரவதை செய்யப்பட்டிருந்தார்கள். அதை மெய்ப்பிப்பதற்கான தழும்புகளும் அவர்களில் இருந்தன. ஆனால் பிரித்தானிய அரசு அவர்களை அவர்களுக்கு அட்டூழியம் இழைத்தவர்களிடமே கையளித்துக் கொண்டிருந்தது.

நான் ஒரு லண்டன் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கே தடுப்பு முகாம்களில் இருக்கும் புகலிடக் கோரிக்கையாளரை சந்திக்கச் செல்லவும் பலர் இருந்தார்கள். இந்த வகையில்தான் சித்திரவதையில் அகப்பட்டும் உயிர் தப்பியிருந்த சில தமிழர்களோடு தொடர்பு ஏற்பட்டது. எனவே எங்களில் சிலர் இந்த தமிழ் ஏதிலிகளை, பேருந்துகள் விமான நிலையத்துக்கு கொண்டு செல்வதை பௌதீக ரீதியாக தடுக்கும் நேரடி நடவடிக்கை முயற்சி ஒன்றை ஆரம்பித்தோம். எங்களுக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்தது ஆனால் சிறிலங்கா தொடர்பான பிரிட்டனின் வளைந்து கொடுக்காத வெளியுறவுக் கொள்கை என்னை மூச்சிழக்கச் செய்து விட்டது என்பதுடன், சிறிலங்கா தமிழர்களை சித்திரவதைக் குள்ளாக்குவதற்கு உடந்தையாய் இருப்பதற்கு அது ஏன் இவ்வளவு உறுதிப்பாடு கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள விரும்பினேன்.

நான் பிரித்தானியாவின் ஆவணக் காப்பகங்களுக்கு போகத் தொடங்கியதோடு தகவல் அறிவதற்கான சுதந்திர வேண்டு கோள்களை விடுத்து, பிரித்தானியா மற்றும் சிறிலங்காவினுடைய வரலாறுகள் பற்றி மற்றவர்களை விட கூடுதலாக அறிந்திருந்த தமிழ் மற்றும் சிங்கள அஞ்ஞாத வாழ்கையாளர்களுடன் இணைப்புகளை பெற்றுக் கொண்டேன்.

1979 ஆண்டில் தொடங்கும் இந்த அறிக்கை அதாவது மரபு வழி வரலாற்றாளர்கள் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதாக கூறும் காலத்தை விட 4 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பிரித்தானிய அரசானது ஏற்கனவே அதனை உள்நாட்டுப் போர் எனக் கருதத் தொடங்கியிருந்தால், அந்த ஆண்டை நான் வேண்டுமென்றே தெரிந்து கொண்டிருந்தேன். வெளியுறவு அலுவலகமானது சிறிலங்காவின் புலனாய்வு முகவரமைப்புகளை முழுமையாக சீரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவென முன்னாள் MI5 பணிப்பாளரான ஜக் மோட்டனை இரகசியமாக அனுப்பியிருந்தது. சுதந்திரத்துக்கான தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முகிழ்த்திருந்த அந்தக் காலப்பகுதியிலே ‘தமிழர் பிரச்சினையைக் கையாளும் பொறியமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே காணப்படும் உளவுரன் ஆகியவற்றின்; உற்சாகமிழக்க வைக்கும் நிலை தொடர்பான அறிக்கையை அவர் அனுப்பியிருந்தார்.

ஜக் மோட்டன் என்பவர் யார்?
அவசரகால நிலையின் போது, மலேயாவில் ஒரு புலனாய்வு பணிப்பாளராக இருந்தவரான மோட்டன், அயர்லாந்திலான பிரித்தானிய ஆட்சிக் கெதிரான IRA இன் போரியக்கங்களை முறியடிப்பதிலும் ஈடுபட்டிருந்தவராகும். மோட்டனுடைய நிபுணத்துவம் போதாதிருந்தால், 1983ம் ஆண்டில் முரண்பாடு உத்தியோக பூர்வமாக ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் தொடர்பான நேரடிப் பட்டறிவை பெறுவதற்கென பல முதுநிலை பொலிஸ் அதிகாரிகள் பெல்பாஸ்டுக்கு வருகை தந்திருந்தனர். அடுத்த மாதத்தில், தமிழர்கள் மீதான திட்டமிட்ட படுகொலைகள் ( நூழிலாட்டு) நிகழ்ந்த போது சிறிலங்கா பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கறுப்பு யூலை என்று அறியப்பட்ட இந்த நிகழ்வு, முரண்பாட்டின் ஆரம்பத்தை குறித்துக் காட்டுவதாக இருக்கிறது.

சிறிலங்காவானது கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் துணை இராணுவ நடவடிக்கைகளுக்கென ஒரு பொலிஸ் அதிரடிப் படையை நிறுவவென பிரித்தானிய உதவியை வேண்டியது. காலமறிந்து உதவுவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகமும் உறுதியளித்தது. வசதியான முறையிலே, 1983 – 1987வரை முன்னாள் விசேட வான் சேவைகள் அணியின் முன்னாள் போர் வீரர்கள் அடங்கிய KMS ( Kinee Mini services) என்ற ஒரு பிரித்தானிய கூலிப்படை நிறுவனமானது சிறிலங்கா பொலிஸ் அதிரடிப்படையினர் இராணுவ அதிகாரிகள் மற்றும் தாக்குதல் உலங்கு வானூர்தி விமானிகள் முதலியோருக்கு கிளர்ச்சி முறியடிப்பு உத்திகளிலே பயிற்சி அளித்தது. முஆளு ஆனது தற்போது பிரித்தானியாவின் ஆகப்பழைய தனியார் படைத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ஆகியிருப்பதோடு, தற்போது சலடின் செக்கியூறிற்ரி என்ற பெயரில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.

1990 களும் இதற்கு விதிவிலக்கானவையாக இருக்கவில்லை. பிரித்தானியாவின் பயற்சியளிப்புகள் எந்த தடையுமில்லாமல் தொடர்ந்தன. பிரித்தானிய தூதுவராலயத்தின் படைத்துறை ஆலோசகராக இருந்தவர் பிரித்தானியாவின் குடியேற்ற வாத காலத்தில் கென்யா, மலாயா மற்றும் அயர்லாந்தில் கிளர்ச்சி முறியடிப்பு போரியக்கங்களின் தந்தையான ஜெனரல் பிறாங் சிற்சனின் சீடன் நான் என்று பெருமையடித்து கொண்டார்.

பிரித்தானிய பேரரசில் இருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பின், 1997 இல் இத்தீவில் முதுநிலை அதிகாரிகளுக்கான ஒரு படைத்துறை கல்வியகத்தை நிறுவ பிரித்தானிய இராணுவம் உதவியது.

பாதுகாப்பு அமைச்சு இந்தக் கல்லூரியில் இணைத்து விட்ட பிரித்தானிய கேணல் ஒருவர் அங்கே உயர் பதவியொன்றை வகித்தார். அவருடைய 1வது தொகுதி மாணவர்களில் அடங்கியிருந்த இளைஞரான கமால் குணரத்ன, 2009 ம் ஆண்டின் கொலைக் களங்களிலே சிறிலங்கா இராணுவத்தின் 53வது டிவிசனுக்கு தலைமை தாங்குபவராக இருந்தார். தமிழ் பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவை கொலை செய்தது இவருடைய அணிதான் என கூறப்படுகிறது. இதில் உருத்திரிபு செய்யப்பட்ட முரண் நகைச்சுவை என்ன வென்றால் இந்தகல்லூரியின் விருது வாக்கியமாக ‘ஞானத்துடனும் அறிவுடனும் போருக்கு’ என்பது இருப்பதுதான்.

சிறிலங்கா படைத்துறையை தூக்கி நிறுத்தச் செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளின் மத்தியிலும் 2001ம் ஆண்டில் சிறிலங்காவின் பிரதான விமான நிலையத்தின் மீது முடமாக்கும் விதத்திலான தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி, கிட்டத்தட்ட சிறிலங்கா விமானப் படையின் வான்கலங்களில் மூன்றிலொரு பகுதியையும் சிறிலங்கன் எயார் லைன்சின் சிவிலியன் வான்கலங்களில் அரைவாசியையும் அழிக்கக்கூடிய இயலுமை தமிழ் புலிகளுக்கு இருந்தது இதனுடைய பொருண்மிய ரீதியான தாக்கங்களை மட்டுப்படுத்துவதாக, லண்டனிலுள்ள லொயிட் நிறுவனம் தனது கட்டுப் பணங்களை உயர்த்தாமலிருக்க உடன் பட்டது இருக்கிறது. அதற்கு பதிலாக கொழும்பு மற்றும் முக்கிய துறைமுகங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பிரித்தானிய சிறப்பு படை அனுபவசாலிகளை கொண்ட மிகுதிறன் அணி யொன்றை ஒழுங்கு செய்து கொடுத்தது.

பேச்சு வார்த்தை மேசைகளில் புலிகளை ஓரம் கட்டவும் சிறிலங்கா அரசுக்கு சலுகைகளை பெற்றுத் தரவும் பிரித்தானியா அரசியல் அழுத்தங்களை பிரயோகித்தது. பிரித்தானியாவினுடைய பயங்கரவாதச் சட்டம் 2000ஆனது பிரித்தானியாவினுடைய தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் த. வி. புலிகளையும் உள்ளடக்கி இருந்தது. இந்த தடையானது புலிகள் ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை செய்திருந்த வேளையிலேயே விதிக்கப் பட்டது.

2002ம் ஆண்டில் தற்காலிக போர் ஓய்வு ஒப்பமிடப் பட்டிருந்த நிலையிலும் பிரித்தானிய அரசானது தொடர்ந்தும் சிறிலங்கா தரப்பினருக்கு படைக் கலன்களையும் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்து. பிரித்தானிய சிறப்பு படைகளின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மைக்கல் றோஸ் 2002 – 4 வரை சிறிலங்கா படைத்துறைக்கு ‘மூலோபாய ரீதியான பாதுகாப்பு மீளாய்வு’ தொடர்பாக ஆலோசனை வழங்கி யிருந்தார். டெறி நகரில் வைத்து பிரித்தானிய படையினர் ஐரிஷ; இன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களை பெருந்தொகையில் படுகொலை செய்த புளொடி சண்டே (இரத்த வாறான ஞாயிறு) அன்று மைக்கல் றோஸ் அங்கே இருந்தார்.

முனைப்புக்குலையாத ஆதரவு என்ற பிரித்தானிய நிலைப்பாடு 2009ஆம் ஆண்டில் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருந்த போது அயர்லாந்தின் முதுநிலைப் பொலிஸ் அதிகாரிகளை ‘முக்கிய நண்பர்கள்’ என்ற வகையில் சிறிலங்காவிற்கு வருகைதரச் செய்வது தகுதியானதென வெளியுறவு அலவலகம் கருதும் அளவிலான தர்க்க பூர்வமான முடிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் குறித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணைகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கிய போதிலும் ஐயுறவு குரிய இந்த பெல்பாஸ்ற் கொழும்பு பாதுகாப்புத் தொடர்புபடுத்தலின் விபரங்கள் இன்னும் இரகசியமாக பேணப்படுபவையாகவே இருக்கின்றன. வட அயர்லாந்து பொலிஸ் சேவையின் (PSNI) அதிகாரிகளான உதவி பிரதம கொண்ஸ்ரபிள் டங்கன் டக்கோஸ்லாண்ட் மற்றும் பிரதம அத்தியட்சகர் கறிவைற் (Garry White ) ஆகியோர் பெருமளவிலான பயங்கரவாத முறியடிப்பு மற்றும் பொது மக்கள் ஒழுங்கு பேணல் பட்டறிவுகளைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஓய்வு பெற்ற பின், பெல்பாஸ்ரில் தளம் கொண்டு செயற்படுவதும் நீர்த்தாரை பீரங்கிகள் மற்றும் எறிபடைகள் முதலானவை அடங்கலான 05 மட்ட கலகம் அடக்கும் பயிற்சி நெறிகளை வழங்குவதுமான இனெக் ((Ineque) நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பதவியேற்றுக் கொண்டார்கள்;. இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருக்கும் ஐpம் கம்பிள் (துiஅபுயஅடிடந) றோயல் உல்ஸ்ரர் கொண்ஸ்ரபளறி (Royal Ulster Constabulary-RUC) யின் முன்னாள் தலைவராகும்.
ஏன்?
இந்த அறிக்கையானது முரண்பாட்டுக்கான பதிலை புவிசார் அரசியல் பின்னணியில் தேடுகிறது. பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பச் செயலாளரான லியாம் பொக்ஸிடம் இருந்து பெறுமதி மிக்க உள்நோக்கு வெளிவந்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன் அவர் கொழும்பில் ஆற்றிய உரையில் பின்வருமாறு கருத்துக் கூறியிருக்கின்றார்:

‘சிறிலங்காவானது இந்து சமூத்திரத்தில் ஒரு சுழல் மைய நிலையில் இருக்கின்றது. தூரகிழக்கு மற்றும் வளைகுடாவுக்கு இடையேயான முக்கிய கப்பல் போக்குவரத்து மார்க்கங்கள் உங்கள் கரைகளிலிருந்து 25 மைல் தூரத்திலேயே அமைந்;திருக்கின்றன. சிறிலங்காவனது திருகோணமலையிலே, இனிமேல்தான் முழுமை பெறப்போகும் (கப்பற் கொள்ளைக்கு எதிரான) இந்தப் பேராட்டத்திலே வெற்றி கொள்ள முடியாத மூலோபாய ரீதியான சொத்து ஒன்றைக் கொண்டிருக்கின்றது.’