செய்திகள்

பேட்டிங் ஆடர் குறித்து இம்ரான் கானிடம் புகார் கூறிய உமர் அக்மல்: கோபத்தில் பாக். கிரிக்கெட் வாரியம்

கொல்கத்தாவில் நடந்த டி20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இரு நாடுகளையும் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்தியா சார்பில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக்கும், பாகிஸ்தான் சார்பில் இம்ரான் கான், வாசிம் அக்ரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பிறகு இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல் இம்ரான் கானிடம் சென்று பேட்டிங் ஆடரில் தன்னை முன்வரிசையில் களமிறக்கும் படி அணி நிர்வாகத்திடம் கூறுங்கள் என்று தெரிவித்தார். இது கேமிராவில் பதிவானது.
உமர் அக்மலில் இந்த சுயநலமான கோரிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உமர் அக்மல் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரமிஷ் ராஸா உமர் அக்மலை அடுத்த போட்டியில் களமிறக்க கூடாது என்று கோபமாக தெரிவித்துள்ளார்.