செய்திகள்

பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குள் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ அல்லது பேரணிகள் செல்லவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தை அடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து பிரதேசங்களிலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன. இவ்வார்ப்பாட்டங்கள் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்தின் சில பிரதேசங்களுக்கும் கூட வியாபித்திருந்தன.

இதனால், யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலை கடந்த சில தினங்களாக பெருமளவில் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியது என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.