செய்திகள்

பேருந்தின் மீது மீண்டும் எறிகணை தாக்குதல் ,9 பேர் பலி, உக்ரைனில் பரிதாபம்

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சிகாரர்களின் பிடியிலுள்ள நகரில் பேருந்தொன்றின் மீது எறிகணைகள் விழுந்து வெடித்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓரு சில வாரங்களில் இரண்டாவது தடவையாக பேருந்தின் மீது எறிகணைகள் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொனெஸ்டெக் நகரில் இடம்பெற்றுள்ள சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை உடனடியாக உறுதிசெய்யமுடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் அரச படையினர் கிளர்ச்சிக்காரர்கள் மீது குற்றமச்சாட்டியுள்ளனர். குறிப்பிட்ட நகரின் விமானநிலையத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் இருதரப்பும் தீவிரமோதல்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழையும் அந்த பகுதயில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன, விமானநிலையத்தின் ஓரு பகுதி உக்ரைன்அரச படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் குறிப்பிட்ட பகுதிக்கு அருகில் பேருந்தொன்றின் மீது எறிகணைகள் விழுந்து வெடித்ததில் 13 பேர்கொல்லப்பட்டனர்.