செய்திகள்

பேருந்தில் இஸ்ரேலிய பயணிகள் மீது பாலஸ்தீன நபர் தாக்குதல்

இஸ்ரேல் தலைநகர் டெல்அவியில் பேருந்தொன்றில் ஓன்பது பயணிகளை கத்தியால் குத்தி காயப்படுத்திய பாலஸ்தீன பிரஜையை தாங்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைதுசெய்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரிவ் பாலம் என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட நபர் பேருந்திற்குள்ளேயும், வெளியேயும் நின்ற பயணிகளை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பின்னர் அந்த நபர் தப்பிச்சென்ற வேளை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இவரது தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆபத்தானநிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு கரையை சேர்ந்த 23 வயது துல்கெரம்என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதி பேருந்துசாரதியை பலமுறைதாக்கினான்,ஆனால்அவன் தப்பியோட முயலும் வரை அவனைவெற்றிகரமாக சமாளித்தார்,சிறைச்சாலைபிரிவைசேர்ந்தவர்கள் அவனைகாலில் சுட்டுகாயப்படுத்தி கைதுசெய்தனர் என சிறைச்சாலை உத்தியோகத்தர் ஓருவர் தெரிவித்துள்ளார்,
சமீபகாலங்களில் தனிப்பட்ட பாலஸ் தீனியர்களால் இஸ்ரேலியர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கத்தியால் குத்தப்பட்டும், வாகனங்களால் தாக்கப்பட்டும் பல இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உக்கிர மோதல்களுக்கு பின்னரே இந்த வகை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.