செய்திகள்

பேருவளை பன்விலவில் 51 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

பேருவளை பன்வில பிரதேசத்தில் வசிக்கும் 51 குடும்பங்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பிரதேசம் மூடப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினம் அந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. -(3)