செய்திகள்

பேஸ்புக் மீதான தடையை நீக்குங்கள்: சீனாவின் ஆளும்கட்சித் தலைவருடன் மார்க் ஜுக்கர்பெர்க் சந்திப்பு

உலகிலேயே அதிக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீனா (6.67 கோடி பேர்) முதலிடத்தில் உள்ளது. எனினும், அங்கு பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சினா வெய்போ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அங்கு மிகப்பிரபலமாக உள்ளன.

இந்நிலையில், இண்டர்நெட் பற்றி அதிகம் விவாதிக்கும் சீன வளர்ச்சி பேரவையின் ஆண்டுக்கூட்டம் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் அதிபர் மார்க் ஜுக்கர்பெர்க் சீனா வந்துள்ளார். அப்போது, சீனாவில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைக்குழு தலைவர் லியூ யுன்சானை சந்தித்த ஜுக்கர்பெர்க், பேஸ்புக்கிற்கு சீன அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இண்டர்நெட் என்பது எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவானது. எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளும் உரிமையை எல்லா மக்களுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கு உண்டு. சீனாவின் சித்தாந்தங்களுக்கு ஏற்ப இண்டர்நெட்டை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், தற்போது பேஸ்புக் நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் உள்ளதால் சீன இண்டர்நெட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரைவில் வழிபிறக்கும் என லியூ யுன்சான் நம்பிக்கை தெரிவித்தார்.
பேஸ்புக் அதிபர் மார்க் ஜுக்கர்பர்க்கின் மனைவி பிசிலியா சான், சீன வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.