பொக்கோ ஹராம் மீது தாக்குதல் நடத்தி 200 சிறுமிகளையும் 93 பெண்களையும் நைஜீரிய இராணுவம் மீட்டது
நைஜீரியாவின் சம்பிஸா காட்டுப் பகுதியில் பொக்கோ ஹராம் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி 200 சிறுமிகளையும் 93 பெண்களையும் மீட்டிருப்பதாக நைஜீரிய இராணுவம் இன்று தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் கடந்த வருடம் ஏப்பிரலில் ஸ்போ என்ற கிராமத்தில் போக்கோ ஹராம் பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்ட பாடாசாலை சிறுமிகள் உள்ளடங்குகின்றனரா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், மீட்கப்பட்டவர்கள் அவர்களே என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட பெண்கள் பற்றிய விபரங்கள் அறியப்பட்டு வருவதாகவும் அவர்கள் இன்னமும் தமது குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனெரல் கிரிஸ் ஒழுகொலடே தெரிவித்தார்.
பொக்கோ ஹராம் மீதான இந்த தாக்குதலின் போது அவர்களின் மூன்று முகாம்கள் நிர்மூலம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.