செய்திகள்

பொது­மக்களின் காணியில் விகாரை அமைக்கும் பணியில் இரா­ணு­வத்­தினர்

முல்­லைத்­தீவு கொக்­கி­ளாயில் தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் சட்ட விரோ­த­மாக விகாரை அமைக்­கப்­பட்டு வரு­வ தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் துரை­ராசா ரவி­கரன் தெரி­வித்தார். முல்­லைத்­தீவு கொக்­கிளாய் வைத்­தி­ய­சாலைக் காணியின் ஒரு பகு­தி­யையும் ,தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­க­ளையும் பாதை ஒன்­றையும் அப­க­ரித்து தேரர் ஒரு­வரால் படை­யினர் துணை­யுடன் குறித்த விகாரை அமைக்­கப்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில் ,

பொது மக்­களின் தக­வ­லை­ய­டுத்து நேற்றுக் காலை கொக்­கிளாய் சென்­றி­ருந்தேன். விகாரை அமைக்­கப்­படும் காணிக்குச் சொந்­த­மா­ன­வர்­களில் ஒரு­வ­ரு­டனும் ஆவ­ணங்­க­ளு­டனும் குறித்த இடத்­திற்குச் சென்­ற­போது 20 க்கும் அதி­க­மான படை­யினர் விகாரை கட்டும் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. குறித்த செயற்­பாட்டை முன்­னெ­டுத்­துள்­ள­தாக கூறப்­படும் தேர­ருடன் உரை­யாட வேண்டும் என நான் கேட்­ட­போது அவர் அங்­கில்லை என தெரி­வித்­தனர். உடனே படை­யி­ன­ரிடம் குறித்த ஆவ­ணங்­களைக் காட்டி, இவ்­விடம் தனியார் காணி என்றும் அங்கு இவ்­வா­றான நட­வ­டிக்கை மேற்­கொள்­வது சட்­ட­வி­ரோதம் என்றும் கூறினேன்.

அங்­கி­ருந்த படை­யினர் ,தாம் தம்­மு­டைய உயர் அதி­கா­ரியின் பணிப்பின் பேரிலே அங்கே வந்­துள்ளோம் என்றும் தமக்கு ஏதும் தெரி­யாது என்றும் தெரி­வித்­தனர். மேலும் குறித்த தேரர் கொழும்பு சென்­றி­ருப்­ப­தாக கூறி விட்டு விகா­ரையின் கட்­டு­மான பணி­களைத் தொடர்ந்­தனர். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் படை­யினர் துணை­யுடன் ஒரு மத­குரு இவ்­வாறு அத்­து­மீ­று­வது இங்கு சாதாரணமாகிவிட்டது. இது மதவாதத்தின் உச்சக்கட்டமாகும். இது குறித்து உரிய வர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என்றார்.