செய்திகள்

பொதுச் செயலாளர் பதவியில் மாற்றமில்லை: பிரியதர்ஷன யாப்பா அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை விலக்குவதாக ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெரிவித்த சுதந்திரக்கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தானே தற்போதும் பதவியிலிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவாக செயற்படுகின்றோம் என்றோ, பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டமைக்காகவோ ஜனாதிபதி தம்மை அழைத்து பேசவில்லை. ஊடகங்களின் செய்திகளினூடாகவே நாம் இவை தொடா;பில் அறிந்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

“20 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரே. அதில் விருப்பு வாக்குமுறை நீக்கம் போன்ற முக்கிய அம்சங்கள் இருப்பதால், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அதில் விருப்பமில்லை. எனவேதான் சட்டமூலம் பாராளுமன்றுக்கு வருவது தாமதமாகிறது.

சுதந்திரக் கட்சியினர் அன்றுபோலவே இன்றும் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து சட்டமாக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். சுதந்திரக்கட்சியினரின் முழு ஆதரவும் இருக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.