செய்திகள்

பொதுத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: சரத் பொன்சேகா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயக கட்சி தலைவரான முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் தற்பொது இடம்பெற்று வரும் அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்பதுடன் அதில் தானும் நிச்சயம் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.