செய்திகள்

பொதுத் தேர்தலில் மகிந்தவைக் களமிறக்குவோம்: 58 லட்சம் மக்களின் விருப்பம் என்கிறார் விமல்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் எமது தரப்பின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ஷவை கள­மி­றக்­குவோம். 58 லட்சம் மக்­களின் ஒரே எதிர்­பார்ப்பு அது­வே­யென தெரி­விக்கும் முன்னாள் அமைச்­சரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இடம் கிடைக்­கா­விடின் மூன்றாம் கட்­சி­யாக கள­மி­றங்­குவோம் எனவும் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க் ஷவை போட்­டி­யி­ட­வைக்கும் முயற்­சிகள் சாத­க­மா­னதா என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

இன்று 58 இலட்சம் மக்கள் அனா­த­ர­வா­கி­யுள்­ளனர். அவர்­களை பாது­காக்க வேண்டும். அதேபோல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அணியின் 62 இலட்சம் வாக்­கு­களில் பலர் இன்று எம்­பக்கம் வந்­து­விட்­டனர். அவர்­களை பாது­காக்­கவும் நாட்டை மீண்டும் முன்­னெ­டுத்து செல்­லவும் மகிந்த ராஜ­பக்ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வர­வேண்டும்.

எனவே அதற்­காக நாம் எடுத்­து­வரும் முயற்­சிகள் வீண் போகாது. எமது நுகே­கொடை கூட்டம் அதன் பின்னர் கண்­டிக்­கூட்­டத்தில் மஹிந்த ராஜ­பக் ஷவை ஆத­ரித்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்று கூடினர். இவ் எடுத்­து­க்காட்­டுகள் அனைத்தும் வெறு­மனே காலத்தை கடத்தும் வேலை­யல்ல. அடுத்த பொதுத்­தேர்­தலின் போது பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை கள­மி­றங்க வேண்டும். ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சியில் 58 இலட்சம் மக்கள் அனா­த­ர­வா­கி­யுள்­ளனர்.

அவர்கள் இன்று மகிந்த ராஜ­ப­க் ஷ­விற்­காக குரல் எழுப்­பு­கின்­றனர். எனவே, எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக மகிந்த ராஜ­பக்ஷ கள­மி­றங்க வேண்டும் . அவரை எப்­ப­டி­யேனும் தேர்­தலில் கள­மி­றக்­குவோம். அதேபோல் எம்மை நம்பி வாக்­க­ளித்து இன்று அனா­த­ர­வாக்­கப்­பட்­டி­ருக்கும் 58 இலட்சம் மக்­களின் எதிர்­பார்ப்­பினை பூர்த்­தி­செய்­வ­துடன் அனைத்து மக்­க­ளையும் பாது­காப்போம்.

அதேபோல் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்கட்சியின் ஒத்­து­ழைப்­புடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் கீழ் மகிந்த ராஜ­பக் ஷ போட்­டி­யிட வேண்டும். அதற்கான ஆதரவினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு மஹிந்தவை இவர்கள் புறக்கணிப்பார்களாயின் மூன்றாவது கட்சி யாக நாம் மகிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளாராக களமிறக்குவோம் எனவும் குறிப்பிட்டார்.