செய்திகள்

பொதுத் தேர்தலுக்காக வகுக்கப்படும் வியூகங்கள்: சந்திரிகா கம்பஹாவில் போட்டியிடுவார்?

ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்களை வகுப்பதில் சகல அரசியல் கட்சிகளும் தற்போது சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ளன.

அத்தகைய பின்னணியில் கட்சி பிரசாரத்துக்கு யார் தலைமை தாங்குவதென தீர்மானிப்பதில் குறிப்பிட்ட சில நெருக்கடிகளை ஐ.தே.க. பெற்றுக் கொள்ளும் சாத்தியப்பாடு காணப்படுகிறது.

ஜனாதிபதி சிறிசேனவினால் சுதந்திரக் கட்சியின் பிரசாரத்துக்கு தலைமை தாங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால கையளிக்கும் சாத்தியப்பாடும் காணப்படுகிறது.

அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு தேர்தலில் தலைமை தாங்குவதென ராஜபக்ஷ தீர்மானித்தால் சந்திரிகா அல்லது அவரது மகன் கம்பஹா மாவட்டத்துக்கு தலைமை தாங்குவார்களென கூறப்படுகிறது.

கம்பஹா மாவட்டம் பண்டாரநாயக்காக்களின் வலுவான கோட்டையாகும். எவ்வாறாயினும் மாவட்ட அல்லது தேசிய மட்டத்திற்கு சந்திரிகா இப்போது வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரிகா பாராளுமன்றத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டுமெனவும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்த அவரின் மகன் விமுக்தியை கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கை விடப்படுவதாக அறியவருகின்றது.

விமுக்திக்கு நவம்பரின் பின்னர் நல்ல காலம் என சோதிடர்கள் எதிர்வு கூறியுள்ளனர். அத்துடன் சந்திரிகாவின் காலமும் சிறப்பாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் பண்டாரநாயக்காக்களுக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் முக்கியமானதொன்றாக அமையும் சாத்தியப்பாடு காணப்படுகிறது.