செய்திகள்

பொதுத் தேர்தலுக்கு நாமும் தயார்: நிமால் சிறிபால டி சில்லா அறிவிப்பு

எதிர்க்கட்சிகளை அரவணைத்துக்கொண்டு அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திப்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பது தொடர்பாகக் கேட்டபோதே நிமால் சறிபால டி சில்வாஇவ்வாறு தெரிவித்தார்,

கொழும்பில் இன்று ஊடகவியளபளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பாராளுமன்றதடதைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது, பிரதமருக்கல்ல எனவும் நினைவுபடுத்தினார், அதேவேளையில் அடுத்த பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலேயே முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், பொதுத் தேர்தலுக்கு தாம் அஞ்சவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அரசாங்த்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்க சுதநடதிரக் கட்சி தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிதடதார்.