செய்திகள்

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இருமாத கால அவகாசம் தேவை – மகிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கு குறைந்தது இரு மாத காலமாவது அவகாசம் தருமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து இரு மாதங்களாவது அவகாசம் வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பாக பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.