செய்திகள்

பொதுத் தேர்தல் குறித்து ஆராய தமிழ்க் கூட்டமைப்பு கொழும்பில் நாளை கூடுகிறது

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஏனைய கட்சிகள் ஆரம்பித்துள்ள நிலையில் இத் தேர்தல் தொடர்பிலான கூட்டத்தை  கூட்டுமாறு கூட்டமைப்பின் தலைவரிடம் ஈ.பி. ஆர். எல்.எவ், ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் கடிதம் மூலம் கடந்த திங்கட்கிழமை கோரிக்கை விடுத்திருந்தன.

இதன் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் போது தேர்தல் பிரசாரப் பணி, தேர்தல் விஞ்ஞாபனம், வேட்பாளர் பங்கீடு தொடர்பில் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கில் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சிகளிடையே விட்டுக் கொடுக்கும் போக்கு வெகு குறைவாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.