செய்திகள்

பொதுபல சேனாவின் கட்சியில் ஸ்ரீ.ல.சு.க எம்.பிக்கள் சிலரும் இணைய திட்டம்

பொதுபல சேனா அமைப்பினால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கட்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரபல எம்.பிகள் இருவரும் மேலும் சில அரசியல் கட்சிகளின் முன்னாள் தலைவர்கள் சிலரும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்த எம்.பியொருவரும் மற்றும் குருநாகலையை சேர்ந்த எம்.பியொருவரும் அந்த கட்சியில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் குறித்த புதிய கட்;சியின் தவிசாளர் பதவி மேற்கூறியவர்களில் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இராணுவத்தில் பணியாற்றிய மேலும் சிலரும்; இந்த கட்சியில் இணையவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.