செய்திகள்

பொதுபல சேனா தனித்தே போட்டி தமிழர் , முஸ்லிம்களும் இணையலாம் என்கிறார் ஞானசார தேரர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியுடனும் கூட்டு சேராது தனித்தே தமது கட்சி போட்டியிடுமென பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது கட்சி சிங்கள பௌத்த அடிப்படைவாத கட்சியல்லவெனவும் தமிழர் , முஸ்லிம் என சகலறுக்கும் கட்சியின் கதவு திறந்தே இருப்பதாகவும் அவர்கள் கட்சிக் கொள்கைகளுக்கு இணங்கினால் தேர்தலில் போட்டியிடவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வார பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.