செய்திகள்

பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும்: அசாத் சாலி கோரிக்கை

பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்­களை இழி­வாக பேசி­ய­மைக்­காக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் டியூ. குண­சே­கர, திஸ்ஸ விதா­ரண, விமல், வாசு, தினேஷ் ஆகிய ஐவரும் தனி­யாக போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்டினால் தான் அர­சி­ய­லி­லி­ருந்து வில­குவேன் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று இடம்­பெற்ற போதே அவர் இதனை தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

“ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்­சியில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை குறைத்து மக்­க­ளுக்கு வழங்­கிய நிவா­ர­ணங்­களை வர்த்­த­கர்கள் வழங்க வேண்டும். அதனை வழங்க மறுத்து விட்டால் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இடம்­பெற்­றதை போன்று அதி­கா­ரத்தை நாங்கள் கையில் எடுக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவை போலன்றி தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகவும் எளி­மை­யாக வாழ்ந்து வரு­கின்றார். எனினும் ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு சொந்­த­மான 1,800 வாக­னங்­களில் 300 வாக­னங்கள் இது­வரை கிடைக்­கப்­பெ­ற­வில்லை. மேலும், இந்தியாவிலிருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட மிகவும் அதிக பெறு­மதி வாய்ந்த வாகனம் மகிந்த ராஜ­பக்­ஷ­விடம் இருப்­ப­தா­கவும் இது தொடர்பில் தேடுதல் வேட்டை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் தமக்கு உரிய இடம் கிடைக்­காது என்ப­தனால் இட­து­சாரி தலை­வர்­க­ளான விமல்­வீ­ர­வன்ச, வாசு­தேவ நாண­யக்­கார, திஸ்ஸ விதா­ரண, தினேஷ் குண­வர்த்­தன மற்றும் டியூ.குண­சே­கர ஆகியோர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வை பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க முனை­கின்­றனர். குறித்த இட­து­சாரி தலை­வர்­க­ளுக்கு வெற்றி பெற முடியும். எனினும் மஹிந்த ராஜ­பக் ஷ­வினால் இனிமேல் பிர­தேச சபை தேர்­தலில் கூட வெற்றி பெற இய­லாது.

குறித்த ஐந்து இட­து­சாரி எம்.பி.க்கள் தனித்­த­னியே போட்­டி­யிட்டு அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் வெற்றி பெற்­றால் நான் அர­சி­ய­லி­லி­ருந்து வில­குவேன். மேலும் நுகே­கொ­டையில் எதிர்­வரும் 18ஆம் திகதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் கூட்டம் ஏற்­பாடு செய்­ய­வுள்­ளனர். இக்­கூட்­டத்­திற்கு 57 இலட்சம் பேருக்கு அழைப்பு விடுத்­துள்­ளனர். எனினும் அக்­கூட்­டத்­திற்கு மக்கள் செல்ல போவ­தில்லை. அக்­கூட்­டத்­திற்கு 5,000 பேர் வருகை தந்தால் நான் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கு­வ­தா­கவும் சவால் விடுத்தார்.

நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களை அவதூறாக பேசியமைக்காக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும். மேலும், ராஜபக் ஷ குடும்பத்தினால் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் உண்மையான தகவல்களை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.