செய்திகள்

பொதுமக்கள் காணிகளில் உள்ள மட்டு. பாலமுனை போலிஸ் நிலையத்தை உடன் அகற்றுமாறு துரைரெட்னம் வலியுறுத்து

மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை கிராமத்தில் பொதுமக்களின் காணிகளில் பொலிஸ் நிலையத்தினை அகற்றி அதனை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கையெடுக்குமாறும்,நஸ்ட ஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் கோரி மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்புமாவட்டத்தில் போரதீவுப்பற்றுவெல்லாவெளிபிரதேசசெகலகப்பிரிவில் உள்ள பாலமுனை கிராமத்தில் 1990ம் ஆண்டு எற்பட்டயுத்தம் காரணமாக பாலமுனை கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து பலாத்காரமாக அண்ணளவாக 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அவர்களின் அனுமதியின்றி எழுப்பப்பட்டு அந்த இடத்தில் இராணுவம் நிரந்தரமாக இராணுவமுகாம் அமைத்துக் கொண்டனர். இவ்விடத்தில் இலங்கை இராணுவமும், விசேடஅதிரடிப்படையினரும் காவல்துறைபிரிவும் இருந்ததென்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இக்கிராமத்தில் இருந்த 30 வீடுகளுக்கு மேல் பாதுகாப்பு அரண் அமைப்பதற்கா அகற்றப்பட்டு, முகாமாக மாற்றப்பட்டு பாதுகாப் புமண்மேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.இவ்விடத்திலுள்ள சில வீடுகளை பாதுகாப்புபடையினர் பயன்படுத்திவந்தமை குறிப்பிடத் தக்கதாகும். பாதுகாப்புபடையினரிடம் உரிய இடங்களைக் கேட்டுமீளஒப்படைக்குமாறுகோரியபோது 2014ம் ஆண்டுவெல்லாவெளியில் பொலிஸ் நிலையம் அமைக்கப் பட்டபின் இவ்வீடுகள் தங்களிடம் ஒப்படைக்கப்படும் எனபலராலும் வாக்குறுதிஅளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் வெல்லாவெளியில் புதிய பொலிஸ்நிலையம் அமைக்கப்பட்டு பாலமுனையில் இருந்து வெல்லாவெளிக்கு பொலிசார் இடமாறிக் கொண்டிருப்பதால் இவர்களுக்கான சொந்த இடங்களை மீளக்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

1)சேதமாக்கப்பட்டஉடமைகளுக்கு நஷ்டஈடு வழங்குதல்.
2)நிரந்தரவீட்டுவசதிகளைபெற்றுக்கொடுத்தல்.
3)அப்பகுதியில் வாவியோரம் இருந்தவெள்ளதடுப்புச் சுவரை (மண் அணைக்கட்டு)கட்டித்தருதல்.
4)குடிநீர்,கிணறுசேதமாக்கப்பட்டுள்ளதால் வீடுகள் அமைக்கப்படும் போதுகுடிநீர் கிணறுகள் அமைத்துக் கொடுத்தல்.
5)சுற்றுவேலி,வீதி,மின்சாரவசதி,போன்றவைகள் அமைத்துதருவதற்குநடவடிக்கைஎடுத்தல்.
6)பாதுகாப்பிற்;காகஅமைக்கப்பட்டுள்ளமண்மேடுகளைஅகற்றுதல்.

மேற்குறிப்பிட்டவிடயம் தொடர்பாகபாலமுனைகிராமத்தில் அம்மக்களைச் சந்தித்து இப்பிரச்சினைவிரைவாகதீர்த்துவைக்கப்படவேண்டுமென இம் மக்கள் என்னிடம் கோரிக்கைமுன்வைத்ததற்கிணங்க, இம்மக்கள் பலதரப்பட்டதுன்பதுயரங்களோடுவாழ்ந்துவருவதாலும்,வசிப்பதற்கு இடமின்றி இருப்பதால் மிகவிரைவாக இவர்களுக்கான மீள்குடியேற்ற வேலைகளைதுரிதமாக மேற்கொள்ப்படவேண்டுமென அரசஅதிபரிடம் முன்வைத்தபோது பிரதேசசெயலாளர் ஊடாக அறிக்கை சமர்பிக்கு மாறுபணித்திருந்தார்.எனவே மிகவிரைவாக இதைதூரிதப்படுத்துமாறுகேட்டுக் கொள்கின்றேன்.