செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்களின் போராட்டம் 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு

பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க போராட்டத்தை 14 நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளனர்.
தமக்குறிய சுகாதார பாதுகாப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகளை அடிப்படையாக கொண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் கொரோனா தடுப்பு பணிகளிலிருந்து விலகிக்கொள்வதற்கு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தனர்.
ஆனபோதும் அதிகாரிகளுடான பேச்சுவார்த்தைகளின் போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளதாகவும் இதன்படி போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டது போன்று தீர்வு கிடைக்காவிட்டால் 14 நாட்களின் பின்னர் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)