செய்திகள்

பொது பல சேனா அரசியல் கட்சியாக மாற தயார்

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக நாளை தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் பொதுபல சேனா அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தமிழ் , முஸ்லிம் என பிரதிநிதித்துவம் இருக்கின்ற போதும் சிங்கள பௌத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லை இதனால் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளோம் இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடலை நடத்த தீர்மானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.