செய்திகள்

பொது மன்னிப்பு காலத்தில் இன்று வரை 13 ஆயுதங்கள் அரசாங்கத்திடம் கையளிப்பு

சட்ட விரேதமான முறையில் வைத்திருக்கும்  ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தில் இன்று வரை 13 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  நேற்று காலை வரை மாத்தளை மாவட்டத்தில் 2 ஆயுதங்களும் , இரத்தினப்புரி மாவட்டத்தில் 2 ஆயுதங்களும் , மொனராகலை மாவட்டத்தில் ஒரு ஆயுதமும் , கம்பஹா மாவட்டத்தில் 7 ஆயுதங்களும் , களுத்துறை மாவட்டத்தில் ஒரு ஆயுதமும் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 25ம் திகதி காலை 09.00 மணி முதல் மே மாதம் 6ம் திகதி மாலை 04.00 மணி வரை இவ்வாறு அனுமதிப் பத்திரம் அற்ற சட்ட விரோத  ஆயுதங்களை ஒப்படைக்கும் பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் எனவும் அவ்வாறு ஒப்படைக்கப்படும் ரி56 ரக துப்பாக்கியொன்றுக்கு 25,000 ரூபாவும் , கைத்துப்பாக்கியொன்றுக்கு 10,000 ரூபாவும் , கட்டுத்துவக்கு ஒன்றுக்கு 5000 ரூபாவும் வழங்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.