செய்திகள்

பொது வேட்பாளர் தெரிவு:கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி மகிந்த வாழ்த்து

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவை தொலைபேசியூடாக இன்று சனிக்கிழமை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கு பொது எதிரணி தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை அடுத்தே ஜனாதிபதி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டவில்லை என்று ஜனாதிபதியிடம் தெரிவித்த கரு ஜயசூரிய, இன்னும் பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.