செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிறிதரன், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று எனது காரியாலயமான அறிவகத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டது என தெரிவித்துள்ளார்.அவரின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து இன்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.(15)