செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் எழுச்சி பேரணி ஏற்பாட்டாளர்களினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வேலன் சுவாமிகள், லியோ பாதிரியார், மட்டக்களப்பு சிவில் அமைப்பின் சிவயோகநாதன் ஆகியோர் யாழ். ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.

அதேவேளை மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட போராட்டம். 2009 க்கு பிறகு தாமாக கிளர்ந்தெழுந்த போராட்டத்திற்கு தனிநபர்களோ கட்சிகளோ நாமோ உரிமை கோர முடியாது.ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு பலம் சேர்த்தது. குறிப்பாக சாணக்கியனின் துணிச்சலை மெச்சுகின்றோமென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.இதேவேளை சில்லறை தனமா செயற்பாடுகாளல் மக்களை சிலர் குழப்ப முற்படுகின்றர்.மக்களது ஒற்றுமையினை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டுமென அழைப்பினை விடுத்துள்ளார் வணபிதா லியோ அடிகளார்.(15)