செய்திகள்

பொரளையில் ஒருவர் கொலை சந்தேகநபரும் காயம்

பொரளை – சீவலிபுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடே இக் கொலைக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார், சந்தேகநபரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் சம்பவத்தில் பலியானவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.