Search
Monday 26 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தியாவில் ரூபாத்தாள்களின் தடை உணர்த்தும் பாடம்

இந்தியாவில் ரூபாத்தாள்களின் தடை உணர்த்தும் பாடம்

மருத்துவர். சி. யமுனானந்தா

இந்தியாவில் அண்மையில் மோடி அரசினால் மேற்கொள்ளப்பட்ட 500/=, 1000/= தாள்கள் திடீரென செல்லுபடியற்றதாக்கிய செயன்முறை, பொருளியலாளர்கள் மத்தியில் பாரிய புதிர்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில், பல மாநிலங்களில் பல கோடிக்கணக்கான மக்களிடையே ஒரே வகையான பணத்தைப் பயன்படுத்துவது பாரிய நிதிப்பாய்ச்சல் வேறுபாடுகளை ஏற்படுத்த வல்லது என்பதனை இப்பணத்தடை உணர்த்தி உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலமும் தமக்கே உரிய பணத்தை வெளியிட வேண்டிய தேவையும் வெளிப்பட்டுள்ளது.

ஒரு சிலநபர்கள், அரசியல் கட்சிகள், முதலாளிமார்கள் செய்யும் மோசடிகளினால் அப்பாவிப் பொதுமக்கள் குறிப்பாக நேர்மையாகச் செயற்படும் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றது. மோசடிமிக்க செயல்களால் சொந்த மாநில மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே எதிர்காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம் என்பன தமக்கே உரிய பணத்தினை வெளியிட வேண்டிய தேவை உள்ளது.

திரவப்பணத்தினை நுண்நிதிய விருத்தியில் இருந்து (Microfinance development) மிகப் பெரும் நிதிய விருத்தி (Giga finance development) வரை ஆராயலாம். பணத்தை தடைசெய்யும்போது பொதுவாக நுண்நிதிய விருத்தியே பாதிக்கப்படும். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் சிரமப்படுவர். வீடுகளில் உள்ள சிறுசேமிப்பு, சீட்டு, வட்டிக்குப் பணம் எடுத்து தொழில் செய்தல் என்பன பாதிக்கப்படும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்.

Thick stacks of 500 and 1000 rupee notes.

மத்தியதர மக்கள், செல்வந்தர்களே வங்கிகளில் தமது பணத்தை வைப்பிலிடக்கூடியதாக இருக்கும். மேலும் தமது பணத்தை நகைகளாகவும், காணிகளாகவும், வீடுகளாகவும், வாகனங்களாகவும் முதலீடு செய்வர். இதனை மட்டும் கருத்திற்கொண்டு பணத்தடை சரியானதென வாதிடக்கூடாது. ஏனெனில் கோடிக்கணக்கான வறிய மக்களிற்கு ஏற்படும் சிறிய பாதிப்புக்களே பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். மோடியரசின் பணத்தடையினால் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 15.3 ரில்லியன் பணத்தில் 12.6 ரில்லியன் பணம் மீளவும் மாற்றப்பட்டமை பணத்தடையின் பிரயோகம் பெருமளவில் கறுப்புப்பணத்தைக் கட்டுப்படத்தவில்லை என்ற அனுமானத்திற்கு வரலாம்.

அடுத்து காசற்ற பொருளாதாரம் அல்லது இணையப்பரிவர்த்தனை என்பதும், கோடிக்கணக்கான மக்கள் நுகரும்போது பாரிய இணைய மோசடிக்கு வழிவகுக்கும்.

எனவே இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையே உள்ள மிகப்பெரிய நிதிவளத்தை மேம்படுத்த (Giga finance development) ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான பணத்தினைப் பயன்படுத்துவதே சிறந்தது. இது சமச்சீரற்ற பணப்பாய்ச்சலைக் கட்டுப்படுத்தி அரசியல் ஊழல், மோசடி, தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், கறுப்புப் பணததேக்கம் என்பவற்றை நீக்கும். இதனால் மாநில மட்டத்தில் பொருளாதாரம் விருத்தியடையும். மேலும் போலி நாணயப் பயன்பாட்டை முற்றாக தடுத்து கண்காணிக்கக்கூடியதாக அமையும். அடுத்து வருமானவரி கட்டும் வீதத்தினையும் மக்களிடையே அதிகரிக்கும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *