Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தரமே வெற்றியின் படிக்கல்: ‘பேக்கரி’ தொழில்முயற்சியாளர் தினேஷ்

தரமே வெற்றியின் படிக்கல்:   ‘பேக்கரி’ தொழில்முயற்சியாளர் தினேஷ்

ஆரம்பத்தில் வெறும் பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றையே தயாரித்து சிறிய அளவில் தயாரித்து வெதுப்பக (பேக்கரி) வியாபரத்தை ஆரம்பித்த  தினேஷ் பேக்கரி உரிமையாளர்  தினேஷ்,  இன்று பலரும் வியக்கும்வகையில்  நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய பாரியதொரு வலையமைப்புடன் கூடிய ஒரு பேக்கரியாக தனது  தனது தொழில் முயற்சியை வளர்த்து பல்வேறுபட்ட புதிய பேக்கரி உணவு வகைகளை  யாழ் மக்களுக்கு வழங்கி வருகிறார்.

 தனது வெற்றியின் இரகசியம்  பற்றி பேசும் போது ‘ தரமே’ தனது வெற்றியின் படிக் கற்களாக இருந்தது என்று சொல்கிறார்.

தெற்கில் உள்ள பேக்கரி வலையமைப்புகளுக்கு இணையான தரத்துடன் தினேஷ் இயங்குவது யாழிற்கு பெருமை சேர்க்கும் விடயமாக மட்டுமல்லாமல் இங்கு பலருக்கு வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி கொடுத்திருப்பதும் பாராட்டத் தக்க ஒன்றாகும்.

அவரை அவரது மானிப்பாயில் உள்ள   நிறுவனத்தில் சந்தித்த போது பல சுவாரஸ்யமான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

Thinesh Bekkari  (1)

யாழ்ப்பாணத்தில் உங்களுடைய  தினேஷ் பேக்கரி பிரபல்யமானதாக காணப்படுகின்றது. இப்படி ஒரு நிலைமைக்கு நீங்கள்வருவதற்கு எவ்வாறு  பிரயாசைப்பட்டீர்கள்? 

ஆரம்பகாலத்தில்  எனது தந்தையரினால்  சிறிய அளவிலான பேக்கரியாக மானிப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. அவரதுமுயற்சியே தினேஷ் பேக்கரி   இப்படி ஒரு நிலைமைக்கு வருவதற்கு அடித்தளமாக அமைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் தரத்தினை பேணியமை தான் எங்களின் வெற்றிக்கு  காரணம்.

தினேஷ் பேக்கரி ஆரம்பத்தில் இருந்ததற்கும் தற்போது  இருக்கின்ற நிலைமைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 

ஆரம்பத்தில் இருந்ததற்கும் தற்போது  இருக்கின்ற நிலைமைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. முன்னர் பாண் ,பணிஸ் வகைகளே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது புதிய வகையிலான வெளிநாட்டு உணவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்து வருகின்றோம். இவ் வகை உணவுகள் மக்களினால் அதிகம் விரும்பப்படுகிறது. முன்னர் இயந்திர பாவனை மிகவும் குறைவாக இருந்தது. ஆட்களின் வேலை தான் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கூடுதலான இயந்திரப் பாவனைகள் காணப்படுவதால் இலகுவான முறையில் வேலைகளை மேற்கொள்ள முடியும். நேரம் மீதப்படுத்தப்படுகிறது. வேலைப் பழுக்களும் குறைவாகவே இருக்கிறது. உற்பத்தியும் நல்ல தரமானதாகவும் வினைத்திறன் கூடியதாகவும் இருக்கிறது. மற்றும் ஆரம்பத்தில் பெருமளவிலான வாகன பாவனை இல்லாது இருந்தது. சைக்கிள் மட்டுமே வியாபார பாவனைக்கு உபயோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது பாரிய அளவிலான போக்குவரத்து வாகனங்கள் உபயோகிக்கப்படுகிறது.

பெண்கள்  இந்த துறையில் சாதிக்க முடியும் என நீங்கள் நம்புகின்றீர்களா ? 

நிச்சயமாக முடியும். முன்னைய காலங்களைப் போல அல்லாமல் தற்போது நாம் பல தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகின்றோம். வெறுமனே உடல் உழைப்பினை மட்டும் நம்பி இருந்தால் பெண்களுக்கு இந்த துறை  கடினமானதாக இருக்கும். ஆகவே, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெண்கள் இந்த துறையில் சாதிக்க முடியும் என்பதே எனது கருத்து.

உங்களது சந்தைப்படுத்துதல்  வியூகங்கள்  பற்றி சிறிது கூறுங்களேன் ? 

பாண் பணிஸ் போன்ற சாதாரண பண்டங்களை எல்லா இடங்களிலும் நாங்கள் விற்பனை செய்ய முடியும். பொதுவாகவே புதிய உணவுப்பண்டங்களை நகர்ப்புறங்களில் உள்ள மக்களே விரும்பி வாங்குகின்றார்கள். எமது திருநல்வேலியில் உள்ள கிளையிலேயே நாங்கள்  புதிய பண்டங்களை அறிமுகம் செய்கின்றோம். ஆனால்  கிராமப் புறங்களில் வெறும் பாண், பணிஸ் விற்பனை மட்டும் தான்.மேலும் உயர்ந்த தரத்துடன் கூடிய விலையும் அதற்கான சந்தைப் படுத்துதல்  வியூகங்களில்  ஒன்றாகும்.

நீங்கள் உங்களது வியாபாரத்தின் தனித்தன்மையினை எவ்வாறு பேணி வருகின்றீர்கள் (மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில்) ? 

எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எங்கள் தரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் அதனால் தான் எங்களது வாடிக்கையாளர்களை நாங்கள் தக்கவைத்து கொள்கிறோம். விலையில் அல்ல தரத்தில் அதிக மட்டுமே மாற்றங்களை செய்து வருகிறோம். அத்துடன் பெண்களுக்கான வேலை வாய்ப்பினையும் ஊக்குவிக்கும் முகமாக 80%மான பெண் வேலையாட்களையும் உள்ளடக்கியுள்ளோம்.

யாழில் மற்றைய தொழில் முனைவோருக்கான உங்களது அறிவுரை என்ன ? 

இங்கு இணைந்து செயற்படும்  பண்பானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எல்லா வேலைகளையும் நாமே செய்ய முனையக் கூடாது. எமக்கு எது நன்றாக வருகின்றதோ அதையே நாம் செய்ய வேண்டும். மற்றைய துறைகளில் முன்னணியில் இருப்பவர்களோடு நாம் இணைந்து செயல்பட வேண்டும். இதுவே  ஆக்கபூர்வமான பெறுபேறுகளுக்கு அடித்தளமான விடயமாகும். எமது  மற்றையவர்களோடு இணைந்து  வலையமைப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.  இதுவே எமது பலமாக அமையும்.

Thinesh Bekkari  (3) Thinesh Bekkari  (2)


One thought on “தரமே வெற்றியின் படிக்கல்: ‘பேக்கரி’ தொழில்முயற்சியாளர் தினேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *