Search
Tuesday 15 January 2019
  • :
  • :

துன்ப நெருக்கடியில் கொழும்பு நகரம்

துன்ப நெருக்கடியில் கொழும்பு நகரம்

தண்டனைக் கோவையின் கீழ் எவரை தண்டிக்க முடியுமென கண்டறிவதற்கு மேலும் அனர்த்தங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோமா? தேவைப்படும் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான அவசரம் குறித்து சட்டத்தரணிகள் கீர்த்திமாலா குணசேகர, அஜித்தா எதிரிமான விபரிக்கின்றனர்.

வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்தமை தகைமை வாய்ந்த தொழில்சார் நிபுணத்துவ தகைமை கொண்ட திட்டமிடல் குழுவை நியமித்து கூட்டு சமபங்கு உரித்து (கொண்டமோனியம்) சட்டத்தை முகாமைத்துவப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது. அநேகமான கொண்டமோனியங்களும் அதிக உயர்வான கட்டிடங்களும் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படாமலும் உறுதிகள்  இல்லாமலும் காணப்படுகின்றன. இது பாரிய அனர்த்தத்திற்கு காரணமாகிறது. நிர்மாண ரீதியான குறைபாடுகள் காரணமாக இந்த அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

கொழும்பில் துரிதமாக உயர்வான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்நிலையில், கொண்டமோனியங்களையும் தீப்பிடித்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் போதிய சட்டம் குறித்து நாங்கள் கவனம் செலுத்துகின்றோமா? கொண்டமோனியம் ஒன்றை கொள்வனவு செய்யும் நபர் ஒருவர் அதன் சிறப்பான தன்மையை மட்டுமே பார்ப்பார். சட்டம் பின்பற்றப்பட்டிருக்கின்றதா என்பது பற்றியும் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் உறுதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பாகவும் காப்புறுதிகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் தீயணைப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் கொண்டமோனியத்தின் தரையை தீயணைக்கும் படைகள் சென்றடையக்கூடிய வசதி இருக்கின்றதா என்பது குறித்தும் கொள்வனவு செய்பவர் இவை தொடர்பான சட்டம் குறித்து கேட்கமாட்டார்.

கொண்டமோனியம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு முன்னர் சுயமதிப்பீட்டை நீங்கள் மேற்கொண்டாலும் கூட மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில்கள் அநேகமாக கிடைப்பதில்லை. அத்துடன் எதிர்மறையாகவே காணப்படுகின்றன. கொண்டமோனியம் கட்டிடங்களுக்கான திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. எந்தவொரு ஆவணமுமில்லாத அடிப்படையிலேயே கொண்டமோனியங்கள் இருக்கின்றன. (நிர்மாணிப்பதற்கும் சொந்தமாக கொண்டமோனியங்களை வைத்திருப்பதற்கும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன. சட்டத்தின் பிரகாரம் பொறியியலாளர்களாலோ அல்லது உள்ளூர் அதிகார சபையாலோ அல்லது சட்டத்துக்கு புறம்பான வழியிலோ பெற்றுக் கொள்ள முடியாது.) பல இடங்களில் காணப்படும் கொண்டமோனியம் சொத்துகள் விசேடமாக வெள்ளவத்தையில் உள்ளவை மேற்குறிப்பிட்ட தேவைப்படும் அனுமதியை பெற்றிருக்கவில்லை என்பது அவதானிக்கப்படாத ஒன்றாக காணப்படுகின்றது. திட்டங்களுக்கு அனுமதி பெற்றிராமலும் உறுதிகள் இல்லாமலும் நூற்றுக்கணக்கான கொண்டமோனியங்களில் ஆட்கள் குடியிருக்கின்றனர். கட்டிடங்களை நிர்மாணிப்போர் பணத்தைத் திரட்டுகின்றனர். உரிமையாளர்கள் அங்கீகாரம் பெறுவது குறித்து தொடர்பு கொள்ள முடியாமலும் திட்டங்கள் மற்றும் உறுதிகளை பெற்றுக் கொள்ள தொடர்புகொள்ள முடியாமலும் உள்ளன. எவ்வாறாயினும் இந்த மாதிரியாக ஆவணம் எதுவுமற்ற சூழலிலும் இலங்கை அனர்த்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விளிம்பை எட்டியிருக்கின்ற நிலையிலும் கூட அலட்சியமாக இருந்து வருவதாக தென்படுகிறது. விளையாட்டு வீரர்கள் போன்று செழிப்பான வளர்ச்சியை மகிழ்ச்சியாக நாடு அனுபவித்துக் கொண்டிருப்பதாக தென்படுகிறது. புகழ்பெற்ற கம்பனிகளினால் சிறப்பாக முகாமைத்துவப்படுத்தப்படும் கொண்டமோனியங்களும் இருக்கின்றன. அவை சட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. ஆனால் ஒப்பந்தக் காரர்களும் கட்டிடங்களை நிர்மாணிப்போரும் சட்டத்திற்கு மேலாக தங்களை கருதும் போது பாதிப்பான சூழல் ஏற்படுகின்றது. நிர்மாணப் பணியை பூர்த்தி செய்த பின்னர் ஒப்பந்தக்காரர்கள் பலரிடம் தொடர்புகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது அத்துடன் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களும் நாட்டில் இருக்க மாட்டார்கள். இதனால் அனுமதி பெறும் கடப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத தன்மை காணப்படுகின்றது.

எவரும் சட்டத்தை அமுல்படுத்துவாரில்லை
நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் உயர்ந்த கட்டிடங்களை நிர்மாணித்து சொந்தமாக வைத்திருக்கவும் முகாமைத்துவப்படுத்தவும் முக்கிய அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பலதரப்பட்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், சட்டத்தை யார் அமுல்படுத்துகின்றனர். அனர்த்தம் ஒன்று சம்பவித்த பின்னரே தனிப்பட்டவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். உயிரிழப்புக்கான தீர்வாக இது இருக்க முடியாது. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ஊடகங்களும் இந்த விடயம் தொடர்பாக முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்க வேண்டும். இந்த விடயமானது கட்டிடங்களில் குடியிருப்போரின் மனித உரிமைகளை பாதிக்கின்றது. அத்துடன் இந்தக் கட்டிடங்களுக்கு அருகாமையில் வசிப்போரின் மனித உரிமைகளையும் பாதிக்கச் செய்கின்றது.

2

நிர்மாணத்திற்கு முன்னராக சட்டம்
கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார சபைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, கொண்டமோனிய முகாமைத்துவ அதிகார சபை, சம்பந்தப்பட்ட காணி பதிவு செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு உரிய முறையில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும். இவற்றை கட்டிடங்களை நிர்மாணிப்போர் செய்திருக்க வேண்டும். பலதரப்பட்ட அமைப்புகள், உள்ளூர் அதிகார சபைகள், நகர  சபைகள் அல்லது பிரதேச சபைகள் போன்றவற்றிலிருந்து தேவைப்படும் அங்கீகாரமும் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து சில சமயங்களில் மேலதிக விசேட அனுமதிகளும் தேவைப்படும். அத்துடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை, மின்சார சபை, தேசிய நீர்வழங்கல் வடிகால் சபை, கொண்டமோனிய முகாமைத்துவ அதிகார சபை ஆகியவற்றின் அங்கீகாரங்களும் தேவைப்படுகின்றன.

நிர்மாணத்திற்குப் பின்னரான சட்டம்
அனுமதி பெற்ற நொத்தாரிசு உறுதிகள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட காணிக் கச்சேரிகளில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சொந்தமாக கொண்டமோனியம் அலகுகளை வைத்திருப்பதற்கு இவை அவசியமாகும்.

முகாமைத்துவக் குழுவானது கட்டிடத்தை முகாமைத்துவப் படுத்துவதற்கு நியமிக்கப்பட வேண்டும். உரிமையாளர்களின் பாதுகாப்புக்காக கட்டிடத்தை பாதுகாக்க இந்தக் குழு நியமிக்கப்பட வேண்டும். யாப்பின் பிரகாரமும் முகாமைத்துவக் குழு நிர்வகிக்க வேண்டும். யாப்பின் பிரதியொன்று அந்தக் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும். கொண்டமோனியம் சட்டத்தின் மிகவும் முக்கியமான ஏற்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த சட்டமானது அலட்சியப்படுத்தப்பட்டிருப்பதுடன் சட்டத்தை எந்தவொரு அமைப்பும் கடுமையான முறையில் அமுல்படுத்தாத தன்மை காணப்படுகிறது.

கொண்டமோனியங்களில் வாழ்வோரின் அனுபவங்கள்
மின்னிணைப்புகள் எந்தவொரு மேற்பார்வையுமில்லாமல் தனிப்பட்டவர்களினால் தற்காலிகமாக திருத்தப்படுகின்றன.

பிரதான நுழைவாயில் உட்பட பொதுவான பகுதி குடியிருப்பாளர்களுக்கு தெரியாமலோ அல்லது அவர்களின் அனுமதியின்றியோ கட்டிடங்களை நிர்மாணித்தோரினால் மூன்றாவது தரப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றது. பொதுவான பகுதிகள் சகல குடியிருப்பாளர்களுக்கும் உரித்தானவையாகும். ஆதலால் குத்தகைக்கு விடுவதற்கோ அல்லது கூட்டு பொறுப்பு உரிமையை விட்டுக் கொடுப்பதற்கோ இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

தாழ்வாரங்களில் சுவர்களை எழுப்பி குடியிருப்புகள் விரிவுபடுத்தப்படுகின்றன.  நீர்த்தாங்கிகள் துப்புரவு செய்யப்படாமலும் நீர்க் கசிவுடனும் காணப்படுகின்றன.

நிர்மாணக் குறைபாடுகள் கொண்டமோனியங்களை கொள்வனவு செய்வோர் சிலருக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கின்றன. பாதிப்புகளை மறைத்து வைத்து விட்டு வீட்டுத் தொகுதிகள் விற்கப்படுகின்றன. நிர்மாணக் குறைபாடுகளை கொள்வனவு செய்வோர் கண்டுகொள்வது அபூர்வமானதாகும். சிவில் பொறியியல் பின்னணி அல்லது கட்டிட நிர்மாணப் பணிகளில் சிறப்பான அறிவுகளை கொள்வனவு செய்வோர் கொண்டிராத நிலையில் இந்த குறைபாடுகளை கண்டுகொள்வது கடினமாகும்.

நுழைவாசல்களை இடைமறித்து வாகனங்களை நிறுத்துவது காணப்படுகின்றது. தரை ஓடுகள் அடிக்கடி வெடிப்புற்று காணப்படுகின்றன. அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு  சிக்கலாகியுள்ள பழைய சட்டங்கள்
அனுமதியைப் பெற்றுக் கொள்வது சுலபமான இலக்கல்ல. நடைமுறையில் உள்ள சட்டமானது கட்டிடங்களை நிர்மாணிப்போருக்கு இலகுவானதொன்றாக இல்லை. பல மாடிக் கட்டிடங்களை அவர்கள் நிர்மாணிக்கும் போது அந்தத் திட்டங்களுக்கு சகல விதமான அங்கீகாரத்தையும் உரிய காலத்தில் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து அவற்றைப் பெற்றிருக்க வேண்டும். பலதரப்பட்ட அரசாங்க அமைப்புகளிடமிருந்து இவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. நிர்மாணத் திட்டங்களுக்கு பதிவு செய்யும் முறைமையை இலங்கை தனித்துவமானதாக கொண்டிருக்கின்றது. திட்டங்கள் இரு தடவை பதிவு செய்யப்பட வேண்டும். இதனை திருத்த வேண்டியுள்ளது. கட்டிடங்களை நிர்மாணிப்போருக்கு இந்த நடைமுறை சிக்கலானதாக மட்டுமன்றி செலவைக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இதனால் சட்டத்தை புறக்கணித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அனர்த்தம் ஒன்று ஏற்படும் வரை எவரும் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை. தேவைப்படும் அங்கீகாரத்தையோ அல்லது பதிவு செய்யும் நடைமுறையையோ பெரும்பான்மையான கட்டிட நிர்மாணிப்புப் பணியில் ஈடுபடுவோர் தவிர்த்துக் கொள்கின்றனர். உள்ளூர் அதிகார சபையினால் திட்டங்களுக்கு அங்கீகாரம் பெற்று அவற்றை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலே கட்டிட அலகுகள் முன்கூட்டியே விற்பனை செய்யப்படுகின்றன.கொண்டமோனியம் அலகுகளை அடமானமாகப் பெற்றுக் கொள்ளும் வங்கிகள் கூட சட்டத்தை பொருட்படுத்துவதில்லை.

3

முத்தரப்பு உடன்படிக்கைகள் பதிவு
பிரதான காணி தொடர்பான முத்தரப்பு உடன்படிக்கை பதிவு குறித்தும் வங்கிகள் கவனத்தில் கொள்வதில்லை. அவர்கள் அடமானப் பிணைகளை தனித்தனியான அலகுகளுக்காக பதிவு செய்வதில்லை. சட்டரீதியற்ற இந்த சூழலில் சட்டத்திற்கு மேலதிகமான முறைமைகள் கொண்டமோனியம் சட்டத்தை தோல்வியடையச் செய்வது தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றது. கட்டிடங்களை நிர்மாணிப்போர் சிலர் எழுத்துமூல ஆவணத்தில் தங்கியிருக்கின்றனர். உடன்படிக்கைகள் என்று அழைக்கப்பட்ட அந்த ஆவணங்கள் மூலம் உரிமையாளர்களைப் பெற்றுக் கொண்டு அவர்கள் தங்கியிருப்பதற்கு அந்த எழுத்து மூல ஆவணங்களை வழங்கியிருக்கின்றனர். குடியிருப்பதற்கான அங்கீகார சான்றுப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கூட குடியிருப்பாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டிய தன்மையும் காணப்படுகின்றது. அந்த உடன்படிக்கையானது குடியிருப்பின் உரிமையை உறுதிப்படுத்துவதாக அமையாது. அத்துடன் கட்டிடத்திற்கான பாதுகாப்பு உத்தரவாத ஆவணமாகவும் அது அமையாது.

கொண்டமோனியம் தொழிற்துறையானது நீண்டகாலமாக இந்த நிலைமையிலேயே இருந்து வருகிறது. 1973 இல் இது தொடர்பான விதிமுறை நடைமுறைக்கு வந்தது. 1982 மற்றும் 2003 இல் இரு முக்கியமான திருத்தங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆயினும் சட்டத்தில் பல விடயங்களில் தற்போதைய தேவைப்பாடுக்கு தேவையான விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கவில்லை. உரிய அங்கீகாரங்களை பெற்று நிர்மாணிப்பதற்கான தேவைப்பாட்டை எதிர்கொள்வதாக அந்த சட்ட ஏற்பாடுகள் அமைந்திருக்கவில்லை. விசேடமாக கொண்டமோனியம் சொத்து அபிவிருத்தியானது பொதுவான தன்மைகளைக் கொண்டதாகவும் கட்டிங்களை நிர்மாணிப்போருக்கு தேவைப்படுகின்ற அதிகாரங்களைக் கொண்டதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய சட்டமானது திட்டமிட்ட வீடமைப்பு சமூகங்களுக்கு ஏற்புடையதாக வலுவூட்டப்பட வேண்டிய புதிய பிரிவொன்று சட்டத்தில் தேவைப்படுகின்றது. இரு வீடுகளின் உரிமையாளர்கள் பொதுவான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அது கொண்டமோனியம் சொத்துகளாக அமைகின்றது. இந்த சட்டத்தை மீளாய்வு செய்வதுடன் ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் ஒழுங்கமைப்பாளர் செயற்பாட்டுத் திறனுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் பயிற்சிகளை வழங்குவதும் முக்கியமானதாகும். இதன்மூலம் அத்தகைய சொத்துகளை பாதுகாப்பாக கொண்டிருக்க முடியும். இந்தத் துறையில் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்ட சட்டத்தரணிகளுடன் சட்டத்தை உருவாக்குவோர் கலந்துரையாடுவதற்கான தேவைப்பாடு காணப்படுகிறது. அதன்பின்னர் சட்டத்தை மீளாய்வு செய்ய முடியும். துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் சொத்துரிமைகள் தொடர்பான சட்டங்களுடன் தொடர்புபட்டவர்களாக சட்டத்தரணிகள் அல்லாதவர்களும் வெளிநாட்டு ஆலோசகர்களுமே இருந்து வருகின்றனர். புதிய சட்டங்கள் இருந்தாலும் கூட சட்டவிதியை, சட்ட ஆட்சியை யார் அமுல்படுத்துவார்கள்? அதிகாரிகள் தண்டனை ஏற்பாடுகளை பிரயோகிப்பார்களா? தீ பற்றுவதற்கு முன்பாக அல்லது கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்னராக அவற்றை மீறுவோருக்கு எதிராக தண்டனை கோவை ஏற்பாடுகளை அதிகாரிகள் பிரயோகிப்பார்களா? அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை உருவாக்குவோரின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்கிறோம். நாங்கள் பொறுத்திருந்த பார்ப்போம்.

பினான்ஸியல் ரைம்ஸ்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *