Search
Saturday 16 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா வடக்கில் 32 வருடத்திற்கு பின்னர் முரளிப்பழம்: காடுகளுக்குள் மக்கள்

வவுனியா வடக்கில் 32 வருடத்திற்கு பின்னர் முரளிப்பழம்: காடுகளுக்குள் மக்கள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது. இதனால் அந்த பகுதியினர் சந்தோசத்தில் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

முரளி மரம் 12 வருடங்களுக்கு ஒருமுறை காய்க்கும் இயல்பைக் கொண்டிருந்த போதும் இப்பகுதி மக்கள் 1984 ஆம் ஆண்டுக்கு பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து 2010 ஆம் ஆண்டே மீள்குடியேறினர். மரளி மரம் ஏனைய பகுதிகளை விட அதிகமாக காய்க்கும் தன்மை கடந்த 1984 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்துள்ளது. அதன் பின்னர் தற்போதே பெரியளவில் காய்த்துள்ளதாகவும் தாம் அதனை தாராளமாக பெறக் கூடியதாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிலர் பழங்களை பிடுங்குவதற்காக கோடரிகளைப் பயன்படுத்தி மரங்களை அறுத்து விழுத்துவதனால் அவ்விடத்தில் பொலிஸாரும் வனவள பகுதியினரும் சென்றுள்ளனர்.

01C (1)Aபழங்களை பிடுங்கி ஒரு கிலோ கிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள். பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து பழங்களை பிடுங்கி சாப்பிடுகின்றார்கள்.

நெடுங்கேணியில் ஒலுமடு, ஊஞ்சல்கட்டி, மருதோடை, தண்ணிமுறிப்பு மற்றும் காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் வழமைக்கு மாறாக கணிசமான அளவில் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

01C (2)AN5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *