Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

‘2017 லண்டன் தமிழர் சந்தை’ க்கான ஏற்பாடுகள் பூர்த்தி

‘2017 லண்டன் தமிழர் சந்தை’ க்கான ஏற்பாடுகள் பூர்த்தி

2017 ஆம் ஆண்டுக்கான ‘லண்டன் தமிழர் சந்தை’ நிகழ்வு நடைபெற இன்னமும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் சகல ஏற்பாடுகளும் செய்துமுடிக்கப்பட்டிருப்பதாகவும் சில கண்காட்சி கூடங்களே இன்னமும் எஞ்சி இருப்பதாக பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளன தலைவர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சியில் கலந்துகொள்ள விரும்பும் வர்த்தகர்கள் www.londontamilmarket.org என்ற இணையத்தளம் மூலம் தமது இடங்களை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை தமது கூடாரங்களை பதிவுசெய்துள்ள வர்த்தக ஸ்தாபனங்களின் கூடார அமைவு, சேவைகள், விலைக்கழிவுகள் போன்ற விபரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்திவருவதாகவும் இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கும் வர்த்தக நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு கடந்த இரு ஆண்டுகள்மி மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” இவ்வாண்டும் மிகவும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

எதிர்வரும் ஏப்பிரல் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் Harrow Leisure Centre இல் இந்த நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய வர்த்தக சம்மேளனம் செய்துள்ளது.

150க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல், பாடல், வேடிக்கை நிகழ்வுகள், வினோத நிகழ்வுகள், ஆடை-அலங்கார காட்சிகள் என்று பல்வேறுவிதமான களியாட்ட நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் நடைபெற இருக்கின்றன. பல விலை கழிவுடன் கூடிய விற்பனைகளும் இந்த நிகழ்வில் இடம்பெறும். நுழைவு கட்டணமாக £3 மட்டுமே அறவிடப்படும்.

இம்முறை நிகழ்வில் உள்நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்கும்வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரித்தானிய தமிழர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சுமார் 10000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல இடங்களில் இருந்தும் வந்து இந்த நிகழ்வுகளை பார்வையிட்டிருந்தார்கள். இந்த நிலையில் இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *