செய்திகள்

பொருளாதார முடக்கத்தில் சமூகத்தினை வலுவூட்டல்

மருத்துவர் சி.யமுனாநந்தா

தற்போதய பொருளாதார முடக்க நிலையினால் நாட்டில் அத்திய அவசியப் பொருட்களின் விலை மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கின்றது. இவை இலங்கை முழுவதும் பாதித்தாலும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் அவற்றின் தாக்கம் அதிகம். யுத்தம், கடல்கோள் என அதிக பாதிப்புக்களைச் சந்தித்த எமது மக்கள் தற்போதய பொருளாதார நெருக்கடி நிலையில் அதனை எதிர் கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.

அரசியல் தலைவர்களிடமிருந்தும் அரச அதிகாரிகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மக்களைச் சென்றடையவில்லை. தற்போதய சூழலில் கூட்டுறவு அடிப்படையிலான தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சமூக சேவைத் தொண்டு நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கி பொருளாதார நெருக்கடியினை குடும்ப மட்டத்தில் ஏற்படாது இருப்பதற்கு உதவ வேண்டும். விவசாயப் பண்ணைகள், கால் நடைப் பண்ணைகள் , கடற்றொழில் கூட்டுறவு அமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

தொண்டு நிறுவனங்களை உருவாக்கி வேலையற்றோருக்கு வேலைகள் வழங்கப்படல் வேண்டும். சுய பொருண்மியத்தினை பல்வேறு திசைகளில் தக்க வைத்தல் தற்போதய பொருளாதார நெருக்கடியில் ஏற்படும் சமூக உளத் தாக்கங்களை குறைப்பதற்கு உதவும்.