செய்திகள்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீண்டகாலமாக போட்டிஇடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5சதவீதமாக உயர்ந்து முதல் முறையாக சீனாவை முந்தும் என உலக வங்கியின் வளர்ச்சி தர வரிசையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் நாடுகளின் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சிஅட்டவணையை உலக வங்கி வெளியிட்டுவருகின்றது. இவ்வாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுவைத்த உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரும் மற்றும் துணைத் தலைவருமான கவுஷிக்பாசு இது பற்றி கூறும்போது, “2015 ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார் .

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மிகப் பெரிய நாடுகளை முதல் முறையாக இந்தியாமுந்துகிறது. இதன் மூலம் சீனாவின் வளர்ச்சி விகிதத்தை இந்தியா முந்த உள்ளது என்றார்.

நடப்பு நிதியாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 7.1 ஆக இருக்கும் எனத் தெரிவித்த அவர் மற்றய வளர்முக நாடுகளின் வளர்ச்சி வீதம் 4.4 சதவீதமாகக் காணப்படும் அதேவேளை அடுத்த நிதியாண்டில் இது 5.4 சதவீதமாக ஆக உயரலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.