செய்திகள்

பொலனறுவையில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

பொலனறுவை மாவட்டம் கபரண கல்பிட்டிய பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வியாழக்கிழமை (23.04.2015) பிற்பகல் 5.30 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மின்னல் தாக்கத்தில் 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான நாலக்க சம்பத் தென்னக்கோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் நிகழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.