செய்திகள்

பொலனறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் வீசிய புயல்காற்று

பொலனறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் வீசிய புயல்காற்றில், 20 வீடுகளின் கூரைகள் தூக்கியெறியப்பட்டுள்ளது. அத்துடன், மரக்கறி தோட்டங்கள், பழ மரங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளன.

நேற்று (03.05.2015) (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 5.30 மணியளவில் இந்த புயல்காற்று வீசியுள்ளது.

 அதனைத் தொடர்ந்து பெய்த அடைமழையில், ஐஸ் கட்டிகளும் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பொலனறுவை மஹாதலாகொலவௌ, கஹம்பிலியாவ, ரடிகவௌ, சந்துன்கம ஆகிய கிராமங்களையே இந்த புயல்காற்று தாக்கியுள்ளது.

தமது வீட்டின் கூரைகளை இழந்த மக்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். எனினும் இதுவரை எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லையென, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கூரைகளை திருத்தியமைத்து தமது வீடுகளில் மீண்டும் குடியேறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழியமைத்து தர வேண்டுமென, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

cyclone (1) cyclone (2) cyclone (3) cyclone (4) cyclone (5) cyclone (6)