செய்திகள்

பொலிசாரைத் தாக்கி துப்பாக்கி கொள்ளை

வீதிரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது தாக்குதலை நடத்தி துப்பாக்கியை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இன்று அதிகாலை தம்புத்தேகம நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது :-

வீதி ரோந்து சேவையில்; ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை கொள்ளையிட்டுச்சென்ற மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் தம்புத்தேகம பொலிசார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.