செய்திகள்

பொலிவியா செல்கிறது 2.0 படக்குழு!

ரஜினி நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், லைவக்கா நிறுவன தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘2.0’. எந்திரன் பாகம் இரண்டாக உருவாகிவரும் இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள விளையாட்டு நேரு மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படப்பிடிப்பில் ரஜினி மற்றும் இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ள அக்சய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, டெல்லியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 13 ஆம் திகதி முடிவடைகிறதாம்.

அதன்பிறகு, சென்னைக்கு திரும்பும் படக்குழுவினர் சிறிது ஓய்வுக்குப் பிறகு, சென்னையில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு, ஏப்ரல் 22, 23 ஆகிய திகதிகளில் பொலிவியாவிற்கு பயணமாகிறார்களாம். அங்கு பாடல் காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம்.

இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்த்தால், பட வெளியீடு பற்றி இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்லமுடியாது என்றே படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

N5