செய்திகள்

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற வான் மோதி ஓந்தாச்சிமடத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓந்தாச்சிமடம் பகுதியில் வான் ஒன்று போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வேகமாகச்சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது வீதியால் சென்று கொண்டிருந்த முனைத்தீவை சேர்ந்த சி.கமலீஸ்வரன்(40வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடீ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தினையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அப்பகுதியில் விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.