பொலிஸாரின் தாக்குதலால் காயமடைந்த மாணவர்களால் நிறைந்தது தேசிய வைத்தியசாலை
சைற்றத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி சுகாதார அமைச்சுக்குள் நேற்று புகுந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 85ற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் மாணவர்கள் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 6 பொலிஸ் உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)