செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியில் நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது தப்பிச்செல்ல முற்பட்டவேளையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவரிடம் கஞ்சா பொதியொன்று காணப்பட்டதாவும் தெரிவித்த பொலிஸார் காயமடைந்த ஆவரங்கால் புத்தூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி தர்சன் என்ற 26 வயது நபரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்தனர்.